கிரிசாந்தி கொலை வழக்குக் கைதியிடம் விசாரணை: செம்மணி புதைகுழி வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், கிரிசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால்...

அக்குறணையில் கோர விபத்து – 4 பேர் பலி!, எண்மர் காயம்!!

அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (19) முற்பகலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சீமெந்து கலவை லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியில் பயணித்த...
Ad Widget

இ.போ.சா. பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து – பெண் ஒருவர் உயிரிழப்பு – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துக்கும் முச்சக்கரவண்டிக்கும் இடையிலான விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை முற்பகல் (19) அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் அதே...

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கல்வியங்காடு பகுதியிலுள்ள மர விற்பனை நிலையமொன்றில் அதிக இயந்திரத் திறன் (CC) கொண்ட மோட்டார் சைக்கிள்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் இவை...

தர்மன் படத்தில் ரஜினியுடன் இணையும் உச்ச நட்சத்திரம்!!

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு உச்ச நட்சத்திரம் தற்போது ரஜினியின் தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கபோடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், ரஜினியின் அடுத்த படமான தர்மன் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இயக்குநர் அஸ்வத்...

திருப்பலியின் போது சிலுவை விழுந்ததில் ஈக்குவடோரில் கத்தோலிக்க அருட்தந்தை உயிரிழப்பு

ஈக்குவடோரில் திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சிலுவை ஒன்று விழுந்ததில் கத்தோலிக்க அருட்தந்தையான பட்ரிசியோ அல்ஃபிரெடோ சான்செஸ் மொலினாரி (Patricio Alfredo Sánchez Molinari) உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் சனிக்கிழமை (17) ஈக்குவடோரின் குவாயாகில் நகரிலுள்ள பெர்பெத்துவோ சொக்கோரோ (Perpetuo Socorro) தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது. தேவாலயத்தில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, பின்னால் சுவரில்...

மின்கட்டமைப்பை நவீனமயமாக்கத் தவறியதே நாடளாவிய மின்துண்டிப்புக்குக் காரணம்!

மின்சார கட்டமைப்பை நவீனமயமாக்க முன்வைக்கப்பட்டிருந்த யோசனைகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியதாலே நாடுபூராகவும் மின்துண்டிப்பு ஏற்பட காரணமாகும் இது அரசாங்கத்தின் இயலாமையால் ஏற்பட்டதாகும். வரலாற்றில் முதல் தடவையாகவே சுமார் 12மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். களுத்துறையில் அவரது காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடத்திய...

முத்தரப்பு தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கையை 37 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இலங்கை அணியை குசல் மெண்டிஸும், பாகிஸ்தான் அணியை ஷஹீன்...

நடிகர் டைகர் ஷெரொப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!!

மும்பையின் ஜுஹூ பகுதியில் பிரபல பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் பயணித்த கார் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் மற்றும் கூடுதல் விபரங்கள் வெளியாகியுள்ளன. நேற்று மாலையில் கால்பந்து மைதானத்தில் இருந்து தனது காரில் டைகர் ஷெரொப் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த கொலை முயற்சி அரங்கேறியுள்ளது. மோட்டார் சைக்கிளில்...

4ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது!

கலகொடஅத்தே ஞானசார ​தேரரை விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குமார் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரகம் இன்று (19) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பிக்குமார் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்ததுடன், அன்றைய தினம் அங்கு கூடாரம் அமைக்க முற்பட்டவேளை பொலிஸாருக்கும் பிக்குமாருக்கும்...

இஸ்ரேலிலிருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஒஸ்ட்ரியத் தலைநகர் வியன்னா நோக்கிப் பயணித்த ஒஸ்ட்ரியன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த விமானம் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பல்கேரிய போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வௌியிட்டுள்ளன. மொத்தம் 51 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள்...

நாட்டில் மீண்டும் டெங்கு நோய் அபாயம்!

நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானி​லை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முறையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் டெங்கு அதி தீவிரப் பெருந்தொற்று நிலைமை ஒன்று உருவாகும் அபாயம்...

தனியார் மருத்துவமனை தாதி கடத்திக் படுகொலை: கணவன் மருத்துவமனையில் உயிரை மாய்க்க முயற்சி!

இந்தியாவின் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில், தனியார் வைத்தியசாலையொன்றில் தாதியாக கடமையாற்றிய பெண் ஒருவர் காட்டுப்பகுதியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊத்துக்குளி - பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் 26 வயதுடைய குறித்த பெண், கட்டடத் தொழிலாளியாக கடமையாற்றிவரும் தமது கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 14ஆம் திகதி வழக்கம்போல் பணிக்குச் சென்ற தாதியை, வேலை முடிந்ததும்...