‘இந்தியன் 3’ படத்தால் தள்ளிப்போகும் ‘தர்மன்’ பட ரிலீஸ்?

‘இந்தியன் 3’ படத்தை 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ‘தர்மன்’ படத்தின் வெளியீட்டுத் திகதியை மாற்றுவது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ராஷி கண்ணா,...

மாணவர்களுக்கு ரூ. 6,000 பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!

2027 ஆம் கல்வி ஆண்டுக்காக நாட்டிலுள்ள 15 லட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் வீதம் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இதற்கமைய, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 10 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கான நிதி, நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது. மேலும், கல்வி,...
Ad Widget

ஏ-9 வீதியில் கோர விபத்து: மோட்டார் சைக்கிளும் பார ஊர்தியும் மோதியதில் இரு இளைஞர்கள் பலி!

கைதடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த பார ஊர்தியும் (லொறி) நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில்...

செம்மணி அவலத்தை வினோத உடையில் பிரதிபலித்த மாணவனின் பெற்றோர் விசாரணைக்கு அழைப்பு!

செம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர். யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நேற்று இடம்பெற்றது இதன்போது விநோத...

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பு

மதுராந்தகம் - தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து...

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 364 முறைப்பாடுகள்!

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 364 முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது. அதே காலப்பகுதியில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 114 முறைப்பாடுகளும் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஏனைய...

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி புதிய உலக சாதனை படைத்துள்ளார். டி20 சர்வதேசப் போட்டிகளில் எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் 2,000 ஓட்டங்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தூர் மைதானத்தில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற போட்டியில்...

ஸ்பெயின் வானில் தோன்றிய பிரம்மாண்ட ஒளித்தூண்கள்

ஸ்பெயினின் கடல் மேல் உள்ள வான் பகுதியில், பயங்கரமான இடியுடன் கூடிய மழையின் போது வானத்திலிருந்து நிலத்தை நோக்கி இராட்சத தூண்கள் போல, ஒளிக்கற்றைகள் விழும் அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த விசித்திரமான வானிலை காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரான்​ சேர்ந்த புகைப்படக் கலைஞர் புளோரியன் ரியூ என்பவர்,...

கச்சா எண்ணெய் விலையில் சற்று வீழ்ச்சி

சவூதி அரேபியா மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட விநியோக அபாயங்களை வர்த்தகர்கள் மதிப்பீடு செய்த அதேவேளையில், ரஷ்யாவிடமிருந்து மேலதிக டீசல் விநியோகம் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொண்டதால், பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 2 அமெரிக்க டொலர் வரை உயர்ந்த கச்சா எண்ணெய் விலையானது இன்று (13) அதிகாலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால...

சுன்னாகம் பொது நூலகத்தில் விசேட புத்தகக் கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதக் கொண்டாட்டங்களின் தொடர் நிகழ்வாக, வலி. தெற்கு பிரதேச சபை சுன்னாகம் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் விசேட புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நேற்று ஆரம்பமானதுடன் அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறவுள்ளது. ‘எங்கட புத்தகங்கள்’ அமைப்பின் பங்களிப்புடன் நடைபெற்றுவரும் இக்கண்காட்சியில், ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியானது இன்றும் சுன்னாகம் பொது...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; இன்று முதல் மழை, மண்சரிவு அபாயங்கள்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை தாழமுக்கம் உருவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும், நாட்டைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும் கடுமையான மழை பெய்யலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 முதல்...