தேசிய வாசிப்பு மாதக் கொண்டாட்டங்களின் தொடர் நிகழ்வாக, வலி. தெற்கு பிரதேச சபை சுன்னாகம் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் விசேட புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நேற்று ஆரம்பமானதுடன் அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறவுள்ளது.

‘எங்கட புத்தகங்கள்’ அமைப்பின் பங்களிப்புடன் நடைபெற்றுவரும் இக்கண்காட்சியில், ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியானது இன்றும் சுன்னாகம் பொது நூலக வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.