தென்னாப்பிரிக்காவில் 11 பேர் சுட்டுக்கொலை!!

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். க்வாமாகுதா (KwaMakhutha) பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய நபர்கள், அங்கிருந்த 14 பேர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....

நாமல் மீண்டும் விளக்கமறியலில்

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புலனாய்வின் சந்தேகநபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில்...
Ad Widget

வடமாகாணத்தில் வாகன வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் இடைநிறுத்தம்!

அத்தியாவசிய கணினி முறைமை பராமரிப்பு வேலைகள் (Important System Update) காரணமாக எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை வடமாகாணத்தில் வாகன வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன. இதன்படி, எதிர்வரும் 25.09.2026 வெள்ளிக்கிழமை முதல் 28.09.2026 திங்கட்கிழமை வரை வடமாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள் மூலமாகவும், இணையவழி (Online)...

யாழில் இரு சிறுமிகளை கடத்தி துஷ்பிரயோகத்திற்கு முயன்ற முச்சக்கர வண்டி சாரதி கைது!

கிளிநொச்சியிலிருந்து காரைநகர் செல்ல வந்த 15 வயதுடைய இரு சிறுமிகளை ஏமாற்றி, மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த முச்சக்கர வண்டிச் சாரதி இளவாளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இரு சிறுமிகள், அங்கிருந்து காரைநகர் செல்லும் நோக்கில் யாழ். பேருந்து நிலையத்தில் நின்றுள்ளனர். அப்போது அந்தச்...

கிரீன்லாந்தை நோக்கி ட்ரம்பின் அடுத்த நகர்வு!!

ஆர்க்டிக் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிரீன்லாந்து, டென்மார்க் தலைவர்கள் செவ்வாயன்று (22) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பை அதிகரிக்க அனுமதிப்பதுடன், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கனிவளம் நிறைந்த அந்தத்...

பிரபல வெதுப்பகத்தின் திருநெல்வேலி கிளைக்கு சீல்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வெதுப்பகத்தின் திருநெல்வேலி கிளைக்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொது சுகாதார பரிசோதகரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த கிளையில், கடந்த 10ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது, சுகாதார குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வழங்கியிருந்தார் குறித்த கால அவகாசத்தில் அவற்றினை...

இலங்கை மகளிர் அணி இந்தியாவிடம் படு தோல்வி!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று (22) இடம்பெற்ற மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து...

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!

1990 களில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் 10 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்றையதினம் (22) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தமது சான்றுகளை சமர்ப்பித்ததுடன்,...

மக்கள் சினிமாவை பார்த்து வாக்களித்துவிட்டனர்!” – முதலமைச்சர் விஜய் குறித்து நடிகை ரோஜா

திரையுலகில் உச்சத்தில் இருந்தாலும், அரசியலில் நுழையும்போது நடிகர் திலகம் உட்பட பல நடிகர்கள் தமிழ்நாடு மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதற்கு மாற்றாக எம்.ஜி.ஆர்.க்கு பிறகு கட்சி ஆரம்பித்த பின், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே முதலமைச்சரானவர் நடிகர் விஜய். இதற்கு அவர் ரசிகர்கள் மிகப்பெரிய காரணம். அதேவேளையில் மாற்றத்தை விரும்பிய பலரும் தமிழ்நாட்டில் இருந்த மற்றக்...

மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்குமா?

உலகச் சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், உள்நாட்டு எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் அதிகரித்துள்ள எரிபொருள் விலையின் சுமையை மக்கள் மீது சுமத்தாமல், மானியமொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்....

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்குக் கடூழியச் சிறைத்தண்டனை – 9 பேர் விடுதலை!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளுக்கான தண்டனை...

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!!

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் எவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியமைப்பின் கீழ் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பான ஏழாவது மதிப்பாய்வு குறித்து...

வங்கி இரகசியத் தகவல்களை பாதுகாக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!!

இணையவழி பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில் இணைய மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மக்களின் அலட்சியத்தை பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருடக்கூடும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். ”தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரத்தின் கடவுச்சொல் (PIN), இணைய வங்கி கடவுச்சொல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP)...

பட்டதாரிகளுக்கு இனி அரச வேலை கிடைப்பதில் சிக்கலா? – பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கேள்வி!

போட்டிப் பரீட்சையின்றி இணைத்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்களா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார் அத்துடன் இன்றுவரை அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்கக்கூடிய வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பினார்....

தாழமுக்கம் வலுவடைந்தது: பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து ஆழமான தாழமுக்கமாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடியாக எவ்வித அச்சுறுத்தலும் இல்லாதபோதிலும், அதனை நோக்கி வீசும் பலத்த காற்று காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது...