வடமாகாணத்தில் வாகன வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் இடைநிறுத்தம்!

அத்தியாவசிய கணினி முறைமை பராமரிப்பு வேலைகள் (Important System Update) காரணமாக எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை வடமாகாணத்தில் வாகன வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 25.09.2026 வெள்ளிக்கிழமை முதல் 28.09.2026 திங்கட்கிழமை வரை வடமாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள் மூலமாகவும், இணையவழி (Online) மூலமாகவும் வாகன வரி அனுமதிப்பத்திரங்களை பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறிப்பிடப்பட்டுள்ள இந்த நான்கு நாள் காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வரி அனுமதிப்பத்திரங்களுக்கு எந்தவித அபராதக் கட்டணமும் (தண்டப் பணம்) அறவிடப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இம்மாற்றத்தைக் கவனத்திற்கொண்டு தங்களது தேவைகளை அதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Posts