பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்!

நாளை (09) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவிக்கையில், அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் தொடர்பில் தமது சங்கம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின்...

வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் பெண் கைது!!

இலங்கை கடற்படையினர், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் நடத்திய கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகுதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று (07) கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான கோட்டாபய நிறுவனம், முல்லைத்தீவு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள...
Ad Widget

ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் சமல்

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார். எயார்பஸ் விமானங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றையதினம் (08) முற்பகல் குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 31 சதொச விற்பனையகங்கள் மூடல்!!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்க மாதுகொட எழுப்பிய...

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (08) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார். ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் விவகாரம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் இவ்வாறாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் முன் ஆஜராகியுள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் விஜய் சரமாரி கேள்வி!!

நேற்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சம்பளங்கள் சட்ட திருத்த மசோதாவைத் தாக்கல் செய்த முதலமைச்சர் விஜய், தொடர்ந்து காவல்துறை மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசினார். அப்போது எதிர்க்கட்சியினரைப் பார்த்து, "மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?" எனக்...

தமிழர்களின் கவனத்தை ஈர்த்த தனுசியா செட்டி!!

வியாட்நாம் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியான 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகு ராணி பட்டத்தை டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா வென்றிருந்தாலும், தனுசியா செட்டி என்ற பெயர் தமிழர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. உலக அழகு ராணி போட்டியில் 3ஆம் இடத்துக்கு தெரிவான அவர், மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி பெண்...

செம்மணி படுகொலை: கிருஷாந்தி உள்ளிட்டோரின் நினைவுவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவி குமாரசாமி கிருஷாந்தி உள்ளிட்டோரின் நினைவுவேந்தல் நிகழ்வு, செம்மணி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டு, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி, 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான...

30,000 ட்ரோன்களுக்கு நிதி… ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்க உக்ரைன் திட்டம்!

ரஷ்யாவுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், கூடுதல் வருவாயை திரட்ட உக்ரைன் அரசு மேற்கொள்ளும் ஒரு வித்தியாசமான முயற்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. நாட்டில் தற்போது சட்டவிரோதமாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை போருக்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து உக்ரைன்...

காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் மெட்ரோ பேருந்து சேவைகள்!!

மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து...

அஜித் படத்திற்கு பிரம்மாண்ட Audio Launch??

அஜித் தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸில் தான் காட்டி வருகிறார். அதனாலேயே தன் அடுத்த படத்தை அவரே தயாரிக்க முடிவு செய்துவிட்டார். இவர் அடுத்து ஆதிக் இயக்கத்தில் டேர்டெவில் என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை ஷாலினி தயாரிக்கிறார். இதற்கு முன்பு அஜித்தின் கார் ரேஸ் டாக்குமெண்டரி ஒன்று கிளாடியேட்டர் என்ற பெயரில் வெளிவரவுள்ளது....

பிக்பாஸ்க்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்!

இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்பர் 1 ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். ஆங்கிலத்தில் இருந்து முதலில் ஹிந்தி வர அங்கிருந்து தென்னிந்தியா பக்கம் வந்து மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. தென்னிந்தியாவில் அண்மையில் எல்லா மொழிகளிலும் புதிய பிக்பாஸ் சீசன் துவங்கப்பட்டுள்ளது. தமிழில் விஜய் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 10 ஆவது சீசன்...

பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை!!

பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும். அதன்படி, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள்பரிசீலனை விண்ணப்பங்கள்!!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியான பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கும், மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் வசதியாக இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுகிறது. பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, விடைத்தாள்களை மீள்மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள்...

மூன்றாவது வருடமாக நல்லூர் கந்தசுவாமியார் சிறுவர் மாம்பழக் கடன் திட்டம்!!

2024 ஆம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவில் மாம்பழத் திருவிழா என அழைக்கப்படும் தண்டாயுதபாணி உற்சவத்தின்போது நல்லூர் கந்தசுவாமியார் சிறுவர் மாம்பழக் கடன் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் சிறுவர்களுக்கு மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்படுகின்ற மாமரக்கன்றுகளை சிறுவர்கள் தங்களது வீடுகளில் நடுகை செய்து, அவற்றைப் பேணிப் பாதுகாத்து, அவற்றிலிருந்து கிடைக்கப்பெறும்...

வறட்சியான வானிலையால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!!

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த நிலைமையுடன் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்களுக்குத் தொடர்ந்து குடிநீரை விநியோகிப்பதற்குத் தேசிய அனரத்த நிவாரண சேவை மையம் நடவடிக்கை...