நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த நிலைமையுடன் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்களுக்குத் தொடர்ந்து குடிநீரை விநியோகிப்பதற்குத் தேசிய அனரத்த நிவாரண சேவை மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, ஏழு மாவட்டங்களில் 34,628 குடும்பங்களைச் சேர்ந்த 113,406 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.