- Wednesday
- August 19th, 2026
அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை ஏஐ, முகாமையாளர் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழில்நுட்ப வரலாற்றில் ஏஐ முகவர் ஒருவர் மனித ஊழியரின் வேலைவாய்ப்பைப் பறித்த முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் 'ஆண்டன் லேப்ஸ்' என்ற நிறுவனம், சோதனைக் கடை ஒன்றை நடத்தி வருகிறது. இந்த...
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. சுற்றுலா - கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அத்துறை அமைச்சர்...
இந்தியாவின் 80 ஆவது சுதந்திர நாள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் இந்திய தேசிய கொடியை ஏற்றி தன்னுடைய உரையை பேசியிருந்தார். இந்நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவும் அவரது அம்மாவும் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது. முதலமைச்சர் விஜய்யின் பதவி ஏற்பு விழா முதல் சுதந்திர...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, தேவ்தத் படிக்கல்லின் அதிரடி 167 ஓட்டங்கள் மற்றும் கே.எல். ராகுலின் 82 ஓட்டங்களின் உதவியுடன் 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்களைக் குவித்தது....
திருநெல்வேலி பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் 08 பேருக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி பகுதியில் கடந்த 3ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரையில் பொது சுகாதார பரிசோதகரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கள தரிசிப்புக்களின் போது, டெங்கு நுளம்பு பரவ கூடிய...
இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகரால் அது கண்டறியப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, காலாவதியான...
பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (Office on Missing Persons –...
2028 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எழுதிய “Yudha Dekakata Ura Dee” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...
இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன் பிடி விசைப்படகு முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரணத் தொகை போல இந்த ஆட்சியிலும் நிவாரணத் தொகை...
ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் மாதம் வெளிவரவிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார்....
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிக மோசமான நிலையில் இலங்கை இருக்கிறது. இப் போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பதாக இருந்தால் போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் இலங்கை கடுமையாக போராட வெண்டிவரும். ஆனால், 6 விக்கெட்கள் மாத்திரமே மீதம் இருப்பதால் இலங்கை முழு நாளும் தாக்குப்...
பிலிப்பைன்ஸில் பாடசாலையொன்றில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு, பின்னர், தாக்குதல் நடத்திய மாணவர், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தாக்குதல் நடத்திய மாணவர், தான் தாக்குவதை நேரலையாக காட்சிப்படுத்துவதற்காக ஒரு கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றதாக...
செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன்கிழமை (19) இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (18) முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க...
சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி,...
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்கீழ் 19 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் (உண்டியல் முறையில்) பணப் பரிவர்த்தனை செய்யும் நபர் ஒருவர் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (18) மாலை வேல்லவீதி பொலிஸ் பிரிவில் இந்தச்...
