- Monday
- August 3rd, 2026
இலங்கையின் மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக கனமழை பொழிவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியரும், நாட்டின் பிரபல வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவசர அறிவிப்பு ஒன்றை...
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில், முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழங்கால் மூட்டு காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலி சர்வதேச அரங்கிலும் (ஆக.15-19), 2வது மற்றும்...
சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஜாதி, மதமற்றவர் என சான்று...
ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன்...
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்மேடுகளும், பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி...
தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் (02) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளை அடிக்கல் நாட்டி...
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் (VTA) வெற்றிடமாகவுள்ள பல்வேறு உயர் மற்றும் நிர்வாகப் பதவிகளுக்காக தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிர்வாகம், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மேலாண்மைத் துறைகளில் திறமையும் தகுதியும் கொண்ட நபர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த வேலைவாய்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது...
நடிகர் விஜய் சேதுபதி ஒருகாலத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்கள் தான் அதிகம் வரும். அந்த படங்கள் தோல்வி அடைந்தால், அது அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தின. அதனால் நான் இனிமேல் கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் விஜய் சேதுபதி. அதன் பிறகு...
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை. ஹோர்முஸ் நீரிணையை விரைவாக மீண்டும் திறப்பது மற்றும் தெஹ்ரானின் அணுசக்தித் திறன் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான உடன்பாட்டை எட்டும் நோக்கில்,...
மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க...
மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சிறைச்சாலையின் பெருமளவிலான சொத்துக்களைக் கைதிகள் அழித்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான கட்டடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகளுக்குக் பலத்த...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (3)சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதற்கமைய, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.27 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதலில் அவர்களுக்கு ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்கிற நிகழ்ச்சியை வருகிற 16ம் திகதி கலைவாணர் அரங்கில் நடத்த உள்ளனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்...
உள்நாட்டுத் தொழில்களை பலப்படுத்தி, மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், இலங்கை நுகர்வோர் கூட்டுறவுச் சமாசம், லங்கா சுகர் கம்பனி மற்றும் பி.சி.சி லங்கா நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. கைத்தொழில் அமைச்சு இந்நிறுவனங்களுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்நிகழ்வு அண்மையில் நாரஹேன்பிட்டியிலுள்ள கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது. இப்புதிய திட்டத்தின் கீழ்,...
