வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு...

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினிப் புலனாய்வுப் பிரிவு இன்று (31) மேற்கொண்ட நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும்...
Ad Widget

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜுன்...

11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி 2027 ஜனவரியில்!

இலங்கை சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்யும் 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் முன்னேற்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை சாரணர் இயக்கத்தின் 115ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 11ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் தேசிய சாரணர் ஜம்போரி, 2027 ஜனவரி மாதம் 17ஆம்...

தேசிய சேமிப்பு வங்கியில் (NSB) புதிய வேலை வாய்ப்புகள்!

இலங்கை தேசிய சேமிப்பு வங்கி (National Savings Bank) வெற்றிடமாகவுள்ள 3 முக்கிய பதவிகளுக்கான புதிய வேலை வாய்ப்பு அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வழங்கப்பட்டுள்ள பதவிகள்: Junior Executive (IT) - Grade IV Executive - Card Operations - Grade III Class III Deputy Regional Security...

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருக்க வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே எச்சரித்துள்ளார். பசிபிக் பெருங்கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள எல் நினோ நிலைமை இன்னும் பலவீனமான கட்டத்தில் இருந்தாலும், எதிர்காலத்தில் அது மேலும் வலுப்பெறக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்....

விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல் மோசடி!!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நேற்றையதினம் பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில்...

தனியார் சந்தைக்கு போட்டியாக கூட்டுறவு சங்கங்களை நவீனமயமாக்க அரசு விரிவான வேலைத்திட்டம்!!

இலங்கையில் கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்து வந்த கூட்டுறவுச் சங்கங்களை மறுசீரமைத்து அதனை நவீன தனியார் சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரிவான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்று வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (31) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற...

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு!

புங்குடுதீவுப் பகுதியில் பனை வெட்டச் சென்ற முதியவர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 67 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; உயிரிழந்த முதியவர் பனை வெட்டுவதற்காகப் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக அவரைக் கருங்குளவிகள் தீவிரமாகக் கொட்டியுள்ளன. இதனைத்...

100 கோடிக்கும் மேல் வசூல்!! ரஜினியா அல்லது விஜய்யா?

தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்வது என்பது மாபெரும் சாதனையாகும். இதனை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்கள் செய்துள்ளார்கள். மேலும், மற்ற மாநிலங்களில் இருந்து வெளிவந்த திரைப்படங்களும் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் எந்த நடிகர் அதிக முறை ரூ....

SLS இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை, SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது. 2015.07.16 ஆம் திகதியுடைய 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப்...

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு – நெய்மர்

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் (34), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சுமார் 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணத்துக்கு நெய்மர் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சான்டோஸ் கிளப் அணியின் போட்டிக்குப் பிறகு நெய்மர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,...

பொலிஸ் சாவடி மீது தாக்குதல்: 11 பொலிஸார் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சாவடி மீது நடத்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனையடுத்து இடம்பெற்ற ஒரு மணிநேரத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர் 15 தீவிரவாதிகளைக் கொன்றதாக...

சில ஊர்களுக்குக் குளிர்ச்சி, பல ஊர்களுக்கு வறட்சி!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. வடமத்திய மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என...

இருள் சூழ்ந்த வாக்குமூலம்!! தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல்!! : நீதிபதியின் உத்தரவு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையிலிருந்த தலைமை தலைமை சிறை அதிகாரி நேற்று (30) நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் அவர் சாட்சியமளித்தார். சம்பவத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரியாகப் பணியாற்றிய...

முதல் அரையாண்டில் அரசு பெற்ற பிரம்மாண்ட வெற்றி!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், இக்காலப்பகுதியில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளதாக நிதியமைச்சின் அரச நிதிப் கொள்கை திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஜனவரி-ஜூன் அரச நிதி ஆய்வறிக்கையில்...