- Friday
- July 24th, 2026
டிட்வா சூறாவளியால் ரயில் பாதைகள் பல இடங்களில் சேதமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவை இன்று (24) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. பாதை புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அண்மையில் வெற்றிகரமான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் பயணிகள் சேவையை மீள ஆரம்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி,...
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு...
கணினி கட்டமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் டிஜிட்டல் EPF தொடர்பான அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிரதேச, மாவட்ட மற்றும் உப தொழிலாளர் அலுவலகங்களிலும் EPF...
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய (24) தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட...
மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களைக் கடந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும் கட்டுப்படுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை இவ்வாறு உயர்ந்துள்ளது. இதற்கமைய, கடந்த...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்குப் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண வீதிப் பயணிகள்...
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர்...
ஜனநாயகன் படம் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் கடைசி படம் இது என்பதால், கடைசி முறையாக தளபதியின் FDFS காட்சியை பார்க்க ரசிகர்கள் எமோஷ்னலாக வந்திருந்தனர். ஜனநாயகன் படம் முதல் நாளில் அதிகம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன தமிழ் படம் என்கிற சாதனையை படைத்து இருக்கிறது....
கொழும்பு துறைமுக நகரப் (Port Cit) பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்துத் தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. உண்மைகளை விரைவில் கண்டறிய முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறும், சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப்...
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாளை மனுவின் (Writ Petition) பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன்படி, குறித்த மனு...
காலாவதியான இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பாக 23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அது தொடர்பில் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த அபராதத் தொகை ஐம்பத்தேழு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் ரூபாய் என அந்த அதிகார சபை அறிவித்துள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய நிறுவனங்கள்...
புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், இன்று (23) முதல் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை இணையவழியில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, www.doenets.lk...
தொன்மை வாய்ந்த யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பார்வையிட்டார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை நேரில்...
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது....
இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக சிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் நேற்று (23) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவரில்...
லங்கா பிரிமியர் லீக் தொடரின் நேற்று (23) இடம்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் கிலன்ட்ஸ் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய கோல் கிலன்ட்ஸ் அணி...
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான நேற்று (23) , 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில்...
