கோட்டாவின் கைதாவதைத் தடுக்கும் மனு ஓகஸ்ட் 03 வரை ஒத்திவைப்பு!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாளை மனுவின் (Writ Petition) பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதன்படி, குறித்த மனு மீதான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 2026 ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் நேற்று (23) உத்தரவைப் பிறப்பித்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தீர்மானத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்சவுக்கு அடுத்த மாதம் வரை ஒரு தற்காலிக அவகாசம் கிடைத்துள்ளது.

Related Posts