- Thursday
- July 23rd, 2026
உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கமான 'எல் நினோ'காலநிலை நிகழ்வு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே இலங்கையில் தீவிரமடைந்து, எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அதன் உச்சகட்ட நிலையை அடையக்கூடும் எனப் சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,...
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 5,523 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே...
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த...
மாண்புமிகு மாணவன் படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் நடிப்பு பயணம் ஜனநாயகன் படத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது. சினிமாவை தாண்டி பெரிய களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய் இப்போது தமிழக முதலமைச்சராக மாஸாக வேலை செய்து வருகிறார். இந்த 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருக்க வேண்டிய ஜனநாயகன் படம் இன்று ஜுலை 23 மாஸாக வெளியாகியுள்ளது....
கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இன்று (23) நினைவு கூர்ந்தனர். கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலை கலவரத்தினால் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் நீங்காத வடுவாகவே நீடிப்பதாகவும் அவர்கள்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனுவின் விசாரணை தொடர்பான வழக்கிற்கான மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். குறித்த மனு கடந்த ஜூலை 09ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்...
நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
இரத்த பரிசோதனைக்காக அதிக கட்டணம் அறவிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் அறவிடப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ஜியோஸ்டார் (JioStar), வரும் செப்டம்பர் 2026 முதல் இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸின் 6 மொழிகளுக்கான பதிப்புகளை ஒரே நேரத்தில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளது. இந்தத் பண்டிகைக் காலத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம் ஆகிய 6 மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத்...
அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு அணி தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஈஸ்டர் பண்டிகை அன்று,...
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கானா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 22 வயதுடைய ஸ்வேதா என்ற பெண் சொந்த ஊர் தெலுங்கானாவில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி...
கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் நேற்று (22) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டானது நியாயமான...
தமிழ்நாட்டில் மாணவர்களை பாடசாலை நோக்கி வரவழைக்கவும், மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கல்வியைக் கற்கவும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்ட அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகிய முன்னாள் முதலமைச்சர்கள் இந்தத் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்தி...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றையதினம் (22) நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான நேற்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில்...
தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது. அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சுற்றிவளைப்பின் போது, இரணைதீவிற்கு தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை கடற்படையினர்...
மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் துல்லியமான விபரங்கள் இதுவரை பகிரப்படவில்லை என்பதுடன், இது இன்னமும் அமெரிக்க காங்கிரஸின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. இது பல தசாப்த காலம் நீடிக்கக்கூடிய, பில்லியன் கணக்கிலான...
செங்கடலில் பகுதியில் பயணித்த 2 சவூதி எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர். ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தும் ஈரானின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், செங்கடலில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இரண்டாவது தடையை ஏற்படுத்துவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே,...
புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம் ஏற்படுவதால், அதனைத் தடுப்பதற்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அந்த நடவடிக்கைகளைக்...
அமெரிக்கா தமது நாட்டின் மருந்துத் தேவைகளுக்கு, குறிப்பாக மலிவு விலை ஜெனரிக் மருந்துகளுக்கு, பெருமளவில் வெளிநாடுகளையே நம்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய மருந்து சந்தையான அமெரிக்காவுக்கு இந்தியாதான் முதன்மை வினியோகஸ்தராக உள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 3 மாத்திரைகளில் 1 மாத்திரை இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது. அதாவது அமெரிக்காவின் மொத்த ஜெனரிக் மருந்து தேவையில் 47 சதவீதம் வரை...
Loading posts...
All posts loaded
No more posts
