இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ஜியோஸ்டார் (JioStar), வரும் செப்டம்பர் 2026 முதல் இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸின் 6 மொழிகளுக்கான பதிப்புகளை ஒரே நேரத்தில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளது.

இந்தத் பண்டிகைக் காலத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம் ஆகிய 6 மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடரை இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சல்மான் கான் (ஹிந்தி), விஜய் சேதுபதி (தமிழ்), நாகார்ஜுனா (தெலுங்கு), கிச்சா சுதீப் (கன்னடம்), மோகன்லால் (மலையாளம்) மற்றும் சௌரவ் கங்குலி (பெங்காலி) ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர்.
இந்திய அளவிலான பிக் பாஸ் வரலாற்றிலேயே இத்தனை மொழிகளில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தொடங்குவது இதுவே முதல்முறையாகும்.
இப்பிரம்மாண்ட மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், ஜியோஸ்டார் நிறுவனம் ‘இண்டியாஸ் பிக் ரியாலிட்டி’ (India’s Bigg Reality) என்ற பிரத்யேகக் காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியப் பண்பாட்டில் ஏற்படுத்திய தாக்கம், பார்வையாளர்களின் பங்களிப்பு மற்றும் அதன் வர்த்தக வெற்றிகளை இந்தப் புத்தகம் விரிவாகப் பதிவு செய்துள்ளது.