- Friday
- May 1st, 2026
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக் சுட்டிக்காட்டிய இந்தியத் துணை ஜனாதிபதி, அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:...
யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு மற்றுமொரு இடத்தில் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாரியளவிலான பதாகை நேற்றைய தினம் நல்லூர் ஆலய முன் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் , திருநெல்வேலி சந்தியில் இன்றைய தினம் மற்றுமொரு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருளை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அடுத்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் மீண்டும் கியூ.ஆர் குறியீடு முறையை நடைமுறைப்படுத்தியது. குறிப்பாக, உலக எரிபொருள் போக்குவரத்தில்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 எலும்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம்...
யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு உதவிய குற்றச்சாட்டில், ஒரு வருட தேடுதலின் பின்னர் புத்தளத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை பகுதியில் சுமார் 160 பரப்பு காணியை போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் மோசடி செய்த சம்பவம்...
யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு பாரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பாரியளவிலான பதாகை ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரையும் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளைச்...
யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை சோதனையிட்ட போது , ஒரு தொகை கஞ்சாவும் , சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றிணையும் மீட்டதாகவும் , அதனை அடுத்து வீட்டில் இருந்த குடும்பஸ்தரை...
பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (19) காலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் ஏனைய நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. இவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இன்று காலை பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் அளவீடு செய்வது எனவும், அதற்கு...
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பாரிய வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியொன்றை சுன்னாகம் பொலிஸார் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (16) பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின்போது, வன்முறை கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கி தாக்குதல் நடத்த இந்த வன்முறை கும்பல் தயாராகிக்கொண்டிருப்பதாக சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து சடலம்...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று (17) செயற்படாது என டிஜிட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை...
முல்லைத்தீவு, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு – துண்டை, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வலை இழுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் சோதனையிட்டபோது,...
சந்திரகுமார் தலைமையிலான அணியினருடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்டத்தில் சந்திரகுமார் அணியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் சூழ்நிலை இல்லை எனத் தெரிவித்தார்....
தையிட்டி விகாரை பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டி பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக்கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் புதன்கிழமை...
யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த சிறுமிக்கு கடந்த 13ஆம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையெடுத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர் நேற்று...
நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்த நெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தெரியவருகையில் நேற்று (15) 3.00 மணிக்கு நெடுந்தாரகை படகு நெடுந்தீவின் மாவிலித் துறைமுகத்தில் இருந்து சேவையை முன்னெடுத்திருந்தது. இன்றைய நாளின் இறுதிச்...
நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய 'கவனயீர்ப்பு போராட்டத்துக்கு’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது எமது அழகிய தீவு. நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளில் சிக்கி, நாளாந்தம் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது என்பது எமது மக்கள்...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் புதன்கிழமை (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை...
Loading posts...
All posts loaded
No more posts
