செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை

செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்பட்டது. செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று (7) யாழ். நீதிவான் லெனின் குமார் முன்னிலையில்...

முல்லைத்தீவில் மது விருந்துக்காக அதிகாரிகளால் முறைகேடாக பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் ; ஊடகவியலாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (7) இரவு பதிவாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் மாங்குளம் வட்டார வன வள திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி...
Ad Widget

மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த கோபாலபிள்ளை கமலதாஸ் (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றுக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அநாதரவான நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து தோட்ட உரிமையாளர் அப்பகுதியில் தேடுதல் நடாத்திய வேளை...

அனலைதீவில் துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி மீட்பு

அனலைதீவு பகுதியில் நேற்றைய தினம் (07) துருப்பிடித்த நிலையிலான கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அனலைதீவு பகுதியில் உள்ள காணி ஒன்றினை அதன் உரிமையாளர் நேற்றைய தினம் துப்புரவு செய்துள்ளார். இதன்போது, மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த குறித்த கைக்குண்டையும் துப்பாக்கியையும் அவர் அவதானித்துள்ளார். இது குறித்து ஊர்காவற்துறை...

யாழில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அறுக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில், பெருங்குற்றப் பிரிவு...