யாழ் விமான நிலையத்தை வினைதிறனாக மாற்ற முயற்சி!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். சுமார்...

நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை...
Ad Widget

முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு : கைதான 4 இராணுவ வீரர்களுக்கும் விளக்கமறியல்

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்படட இளைஞனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி முன்னிலையில் குறித்த 4 இராணுவ வீரர்களும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்பட்ட போது, அவர்களில்...

யாழில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

கொடிகாமம் பகுதியில் நேற்று நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதை அடுத்து, கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த...

ஜனாதிபதியுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் விசேட கலந்துரையாடல்!!!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில்இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் ஆயர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார். மின்...