- Wednesday
- August 20th, 2025

யாழ்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடை தொடர்பாக யாழ். மாநகர சபையின் நேற்றைய அமர்வில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. யாழ்.மாநகர சபையின் முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது நல்லூர் மகோற்சவத்தின்போது அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை தொடர்பாக கடும் வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக நல்லூர் ஆலய பின்பக்க பருத்தித்துறை வீதி முழுமையாக...

இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் படகில் இந்திய எல்லைக்குள் சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் பயணம் செய்த படகு பழுதாகி நின்றுள்ளது. அவ்வழியாக வந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்து ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்கள் படகையும் இரண்டு மீனவர்களையும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு சென்றுள்ளனர். இரண்டு பேரையும் வேதாரண்யம் கடலோர பாதுக்காப்பு...

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் நடத்துவதற்கு முன்னதாக நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கமைய மூன்று கட்டங்களாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்ட அகழ்வுப் பணிகளில் இரண்டு கட்டங்கள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில்...

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்றது. இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்....