Ad Widget

யாழ் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் : ஒருவரது நிலை கவலைக்கிடம்!

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மீனவர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம்...

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசகர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பிரதான பூசகர் தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் விடுதலையான பூசகர் சுகவீனமடைந்தநிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை...
Ad Widget

யாழ். இளைஞனிடம் பண மோசடி செய்த பெண் கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி , இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக , கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்ச ரூபாய் பணத்தினை...

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் 31 மீனவர்கள் கடற்படையினால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31 பேர் நேற்று புதன்கிழமை (20) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறு மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு...

வட்டுக்கோட்டை கொலைச் சம்பவம் – 5 ஆவது சந்தேகநபர் அடையாளம்!

வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு...

வெப்பநிலை உயர்வு : தென்னையில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு!

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்தார். வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகரித்து வரும் வெப்ப நிலையினால்...

நாணயத் தாள்களை சேதப்படுத்தினால் சிறை!

இலங்கையின் நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அவ்வாறு நாணயத் தாள்களை சேதப்படுத்துவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகையான பணமும் அபராதமாக விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது