Ad Widget

இனி ஒன்லைன் மூலம் மட்டுமே ரயில் ஆசனங்கள் முன்பதிவு!!

இன்று (14) முதல் முழுவதுமாக ஒன்லைனிலேயே ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7.00 மணி முதல் ரயில் ஆசனங்களை ஒன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை 40 சதவீத ஆசன முன்பதிவே ஒன்லைன் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல்...

வட்டுக்கோட்டை இளைஞனைக் கடத்துவதற்கு உதவிய கடற்படை!!

வட்டுக்கோட்டையில் இளைஞனைக் கடத்திக் கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம்சாட்டிய நிலையில், இளைஞனைக் கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் அதிர்ச்சி காணொலி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவியுடன் காரைநகருக்கு கடந்த திங்கட்கிழமை உந்துருளியில் சென்று விட்டு, வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும், அவரது மனைவியையும் பொன்னாலை பால...
Ad Widget

யாழ்.பல்கலையின் 38ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று (14) ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை வரையில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. அதில் 2,873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப்...

அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள சவால்!!

போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் சவால் விடுத்துள்ளார். கடலட்டை பண்ணைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர் சிலர் அவ்வப்போது வெளியிடும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு...

தபால்மா அதிபர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

பொதியொன்றுக்கான கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை தபால் திணைக்களத்தைப் போன்று அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் போலியானவை என்று தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யு.ஆரி.பி.சத்குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், எஸ்.எல்.போஸ்ட் அல்லது ஸ்ரீலங்கா போஸ்ட் என்ற பெயர்களில் இந்த போலி குறுஞ்செய்திகள் அனுப்படுகின்றன. எனவே இவற்றில் கடன்...

வெடுக்குநாறிமலை ஆலய பிரச்சினை : ஒன்றுகூடி ஆராயத் தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு

வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை தொடர்பாக ஒன்றுகூடி ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளை மேற்கொண்டவர்களைப் பொலிஸார் கடுமையாகத் தாக்கிக் கைது செய்திருந்தனர். ஆலயப் பூசகர் உட்பட 8 பேர்...