- Monday
- December 11th, 2023

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் இன்று சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டக்களப்பு பண்ணையாளர்கள் சித்தாண்டியில் நடத்தும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இதன் பின்னர், யாழ்ப்பாண பல்கலைகழகத்தை சேர்ந்த 5 மாணவர்களும், கிழக்கு...

நாட்டில் மின்னல் எச்சரிக்கை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம்...

2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி...

யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை (05) விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு...

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், அவர் கடந்த 3 நாட்களாக அங்கு தங்கியிருந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் இருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில், குறித்த குடும்பம் செய்வதறியாது தவித்து வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில்...

வடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கநேற்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும் என்றும்...

இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21ஆம் திகதி கட்சியின் பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது/ இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நேற்றையதினம் முற்பகல் 11மணிக்கு வவுனியாவில் உள்ள சுற்றுலா ஓய்வு விடுதியில்...

இரா.சம்பந்தன், பொதுவெளியில் தன்னை பதவி விலகுமாறு எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான இரு சந்திப்புக்கள் நேற்று நடைபெற்றிருந்தன. இந்த சந்திப்பின் போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தனது மனவருத்தத்தினை தெரிவித்துள்ளார். மேற்படி சந்திப்புக்கள் தொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா...

உக்ரைன் மற்றும் இஸ்ரேல் தலைவர்களுக்கு இடையே சந்திப்பை நடத்த இரு நாட்டு அதிகாரிகளும் முயற்சித்து வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும் என்றும் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்புவதே இந்த சந்திப்பின் நோக்கம் என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது....