Ad Widget

யாழ் சென்னை 100 ஆவது விமான சேவை இன்று!!

சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயான 100 வது விமானசேவை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விமானசேவை மூலம் இதுவரை 10,500 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கொரோனாத் தொற்று இடர்காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமானசேவைகள் பின்னர் 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழிப் பயணிகள் போக்குவரத்துச் சேவையானது...

கஜேந்திரகுமார் நாடாளுமன்றுக்கு வருகைத் தரவிருந்தபோது அவரை கைது செய்யவோ விளக்கமறியலில் வைக்கவோ முடியாது!!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடுகள் குறித்து தம்மிடத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற...
Ad Widget

‘சட்டத்தை மீறியது பொலிசாரே’… முன்னணியினர் வாதம்: கைதான இருவருக்கும் பிணை!

மருதங்கேணியில் பொலிசார் துப்பாக்கி முனையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை அச்சுறுத்திய விவகாரத்தில் விளக்மறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று (7) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டஆலோசகர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்ச நீதிமன்றம் இருவரையும் பிணையில் விடுவித்தது. அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அடம்பிடித்த பொலிசாருடனான சச்சரவை ஒளிப்படம் பிடித்த, பொலிசார் துப்பாக்கியை நீட்டி...

கஜேந்திரகுமார் கைது விவகாரம் : மருந்தங்கேணி பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இன்று விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி பொலிஸாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்தள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் ஊடாகவே இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பகுதியில், கடந்த 3 ஆம்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி – சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவரை அழைத்து வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமை மீறப்படக்கூடாது என சபாநாயகர் என்ற...

நெடுந்தீவு கொலை வழக்கில் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு!!

நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார்....

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது!!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்