- Thursday
- June 8th, 2023

வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி இன்று நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இதற்கமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட பொலிசார் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக...

தென்பசுபிக் சமுத்திரத்தின் பிஜி மற்றும் நிவ் கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 7.7 மெக்னிடியுட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுகெலிடோனியாவிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, வனவாட்டுவில் 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும்,...

நாட்டில் தற்போது வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில், பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என 3 காய்ச்சல் வகைகள் பரவி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. இதன்போது பொதுச்சுடரினை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. இதன்போதுது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ் ரகுராம், பொதுமக்கள்...

வாகனப் பதிவுச் சான்றிதழிலிருந்து வாகனங்களின் முன்னாள் உரிமையாளர்கள் தொடர்பான பெயர் பட்டியலை நீக்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய நேற்று முன்தினம் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அமைய அண்மைக்கால உரிமையாளர் மற்றும் தற்போதைய உரிமையாளரின் தகவல்கள் மட்டுமே சேர்க்கப்படும் என்றும்...

தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும், இரு சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர். தலைமன்னார் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வாகனம் ஒன்றில் கடத்த முற்பட்டதாக இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்...

ரஷ்யா இந்த மாதம் ஒன்பதாவது முறையாக உக்ரைன் தலைநகரை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின் போதுநேற்று (18.05.2023) (வியாழன்) அதிகாலை உக்ரைனின் பல்வேறு பகுதிகளுக்கு எதிராக ரஷ்யா 30 குரூஸ் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதன்போது ரஷ்யா வீசிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை உக்ரைன் ஒரே இரவில் வான்வழித்...