Ad Widget

ரஷ்யாவின் குறியிலிருந்துa தப்பிய உக்ரைன் தலைநகர்!

ரஷ்யா இந்த மாதம் ஒன்பதாவது முறையாக உக்ரைன் தலைநகரை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் நடவடிக்கையின் போதுநேற்று (18.05.2023) (வியாழன்) அதிகாலை உக்ரைனின் பல்வேறு பகுதிகளுக்கு எதிராக ரஷ்யா 30 குரூஸ் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இதன்போது ரஷ்யா வீசிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை உக்ரைன் ஒரே இரவில் வான்வழித் தாக்குதலில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.

இதில் தப்பிய ஒரு ஏவுகணை ஒடேசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் இரண்டு ரஷ்ய வெடிக்கும் ட்ரோன்களையும் இரண்டு உளவு ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏவுகணைகள் ரஷ்ய கடல், வான் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவப்பட்டதாக உக்ரைன் தலைமை தளபதி ஜெனரல் வலேரி ஜலுஷ்னி கூறியுள்ளார்.

மேலும், புதன்கிழமை இரவு 9 மணி முதல் வியாழன் காலை 5.30 மணி வரை உக்ரைனின் பல பகுதிகளை குறிவைத்து பல ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts