- Thursday
- June 8th, 2023

கொடிகாமம், வரணிப் பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து...

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ் வான் ஒன்றும் மற்றும்ங3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத்...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ். லவகுமார் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை தனியார் விடுதியில் மே தினத்தை முன்னிட்டு இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து நேற்றைய தினம்(திங்கட்கிழமை) காலை 08.30 மணியளவில் மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது.

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். 92-ஒக்டேன் பெட்ரோல் விலை 7 ஆல் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது, எனவே அது தற்போதுள்ள கட்டணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அச்சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டிக்கு வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள்...

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை (01.05.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் - அல்லிப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். இந்த விபத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26)...

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்" எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (01.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வ கட்சிப் பேச்சு...

சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்தள்ளது. ஒருவருக்கு காய்ச்சல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசாங்க மருத்துவமனை அல்லது அரச பதிவு பெற்ற மருத்துவரை அணுகி சிகிச்சை...

வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மீண்டும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முகக் கவசம் அணிவது ஒரு கட்டாய சட்டம் அல்ல, ஆனால் ஒரு கோரிக்கை...

உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் தீவிரமடைந்த போரில் டிசெம்பர் மாதம் தொடக்கம் தற்போது வரை 100,000 ரஷ்யர்கள் பாதிக்கப்படடுள்ளனர் எனவும் அவர்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர் என வெள்ளை மாளிகையின் மதிப்பீட்டின்படி என மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று (01.05.2023) இந்த...