Ad Widget

ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு – கிளிநொச்சியில் ஜனாதிபதி

ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அமுள்ப்படுத்தவுள்ளது. ஒரு வாரத்திற்குள் இந்த திட்டம் அமுலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார். கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் அறுவடை விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படாமை, விவசாயிகளுக்கான...

நடைமுறைக்கு வரும் புதிய திட்டங்கள்!கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அடுத்த வருடம் முதல் 6 - 13 வரையான தரங்களுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பாடத்தை எட்டாம்...
Ad Widget

இரண்டாம் கட்டமாக மீண்டும் தீவிரமடையும் போர்! ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கும் பிரித்தானிய ஏவுகணைகள்

பிரித்தானியா உக்ரைனுக்கு Harpoon கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் வான் பரப்பில் இருந்து இலக்கை தாக்கக்கூடிய Storm Shadow ஏவுகணை ஆகியவற்றை வழங்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட ஆயுத உதவியை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார். இதனை தொடர்ந்து அவசரமாக பிரித்தானியா...

திருக்கோணேஸ்வரத்தை இந்தியா பொறுப்பேற்று பாதுகாக்க வேண்டும் – ஆறுதிருமுருகன்

கிழக்கு மாகாணத்தில் இந்தியத்துணைத்தூதுவராலயம் அமைக்கப்படவேண்டும் எனக்கோரிகை முன்வைத்துள்ள அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் திருக்கோணேஸ்வரம் இந்திய அரசாங்கம் பொறுப்பேற்று அதனைப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும்...

ஆசிரிய நியமனத்தை இளம் பட்டதாரிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை!

ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், ‘வேலையில்லாப் பட்டதாரிகள் அமைப்பின் ஊடாக அறியத் தருவது யாதெனில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள...

இலங்கையின் சில பகுதிகளில் நிலநடுக்கம்!

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு நீதிமன்றம் அனுமதி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே உறுதிமொழி அளித்துள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு...

பாழடைந்த வீட்டிலிருந்து 10 பேர் கைது!!

யாழ்.நகரை அண்டியுள்ள பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பாழடைந்த வீடு ஒன்றில் கூடி ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான வைத்தியர் எஸ்.சிவரூபன் 3 வருடங்களின் பின் பிணையில் விடுதலை!!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சின்னையா சிவரூபன் பிணையில் விதலை செய்யப்பட்டுள்ளார். பிரபல சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவின் நீண்ட வாதங்களின் தொடர்ச்சியாக வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் கிளிநொச்சி மேல்நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு ஓகஸ்ட் 18ம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். 3வருடங்களிற்கு மேலான...

இலங்கைக்கு மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி?

வெளிநாடுகளால் நிராகரிக்கப்பட்ட மனித பாவனைக்கு தகுதியற்ற கழிவுகளுடன் கூடிய அதிகளவிலான தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா தெரிவிக்கையில், கடத்தல்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட...

ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை – சுமந்திரன்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு,அதிகார பகிர்வு தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. சமஷ்டி தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து விட்டு தற்போது குட்டிக்கரணம் அடித்ததை போல் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார். ஒற்றையாட்சிக்குள் அதிகார பகிர்வு என்பது சாத்தியமற்றது,சமஷ்டி முறைமையில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்...

24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் தொடர்பில் உக்ரைன் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தங்களுக்கு எதிரான போரில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் 1,030 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் போர்...

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இந்த விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்,...

எதிர்வரும் 17ஆம் திகதி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை!

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வங்கித் தொழிற்சங்கங்கள் இணைந்து...

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் கைத்துப்பாகிகளை தேடிய தரப்பிற்கு கிடைத்த ஏமாற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் கைத்துப்பாக்கிகள் இருப்பதாக தெரிவித்து அதனை தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படடது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய (08.02.2023) நேற்று மாலை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் அதிகளவிலான கைத்துப்பாக்கிகள்...

இலங்கையில் நாளாந்தம் தொடரும் மின்வெட்டு! வீடுகளில் சேதமடையும் மின் உபகரணங்கள்

இலங்கையில் நாளாந்தம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வழங்கும் போது பல வீடுகளில் மின் உபகரணங்கள் சேதமடைவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளிலிருந்தும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற போதும் பொறுப்பான தரப்பினர் நிவாரணம் வழங்காததால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக லக்ஷபான, ஹட்டன்,...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியர்களும் தமது தனியார் துறை சேவைகளில் இருந்து விலகி நாளை(புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எந்தவொரு தீர்வையும் வழங்காத அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

வடக்கிலேதான் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளது என அரசு நினைக்கிறது – வேலன் சுவாமிகள்

வடக்கிலேதான் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளது,வடக்கிலேதான் தமிழர்கள் உள்ளார்கள் என்ற ஒரு போலியான முகத்தினை இலங்கை அரசு காலம்காலமாக ஏற்படுத்தி பிரித்தாளும் தந்திரங்களை முன்னெடுத்துவருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார். வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம். எங்களது உயிர்களை மீறி எங்களின் பிணங்களில் ஏறித்தான் வடகிழக்கினை பிரிக்கமுடியும்...

13வது திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராய மகாநாயக்க தேரர்கள் யாழ். விஜயம்!

13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும், சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளடக்கிய 20 பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ,...

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது என யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ. ஆனோர்ல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோர்ல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை...
Loading posts...

All posts loaded

No more posts