- Tuesday
- May 13th, 2025

குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சமுக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகர் அத்தியடியில் 55 வயதுடைய தாய் 12 ஆம் திகதி இரவு...

ஏ9 வீதி, யாழ். நாவற்குழி பகுதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்வத்தில் படுகாமடைந்தவரை...

இன்னும் ஏழு நாட்களில் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றிற்கு ரஷ்யா தயாராவதாக உக்ரைன் உளவுத்துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள். உக்ரைன் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி இந்த தாக்குதலை புடின் நிகழ்த்தலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. உக்ரைன் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் செயலரான Oleksiy Danilov, இம்மாதம், அதாவது 23 அல்லது 24ஆம் திகதி இந்தத் தாக்குதலை ரஷ்யா...

யாழ்.மாநகர சபையில் சிலர் “வைக்கோல் பட்டறை நாய்” போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் இருந்து வெளியேற்றி அவரது ஒரு மாத சம்பளத்தையும் இரத்து செய்துள்ளனர். யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம்(வியாழக்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, சபையில் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி “சபையில் சிலரின்...

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபனுக்கு இன்று அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிளிநொச்சி – பளை பிரதேச வைத்தியசாலையில் கடமையிலிருந்தபோது 4ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமனை ஊழியர்களாலும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு...

13 ஆம் அரசியலமைப்பு திருத்தம் பாகுபாடின்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு, இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பில் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று...

என்னை பொறுத்தவரையில் எமது அனுபவத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உலகத்திலேயே இல்லை என்பதே என்னுடைய தகவல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய செய்தியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், பிரபாகரன் தொடர்பான தமிழக தலைவர்களின் கருத்துக்கள் இலங்கை தமிழர்களை கஷ்டத்திற்கு உட்படுத்தும். பழ. நெடுமாறன் அறிந்து...

காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான கடற்பாதை சேவை மட்டுப்படுத்தப்பட்டதால் அப்பாதையை பயன்படுத்தும் பல தரப்பினரும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அந்த பாதையை காரைநகர் பிரதேச சபையிடம் தந்தால் அதனை திறம்படச் செய்வோம் என காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிரதேச சபையில் நேற்று(14.02.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு...

தபால் வாக்குசீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கட்சி தலைவர்களுக்கு அறிவித்துள்ளமை உள்ளுராட்சி தேர்தல்கள் பிற்போடப்படலாம் என்பதற்கான அறிகுறி என ஆங்கில செய்தி இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. நாளை இடம்பெறவிருந்த தபால்வாக்குசீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்....

விபத்தில் உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு.றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மேலும் மறைந்த மு.றெமீடியஸ்க்கு யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தினர். யாழ்.மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் கடந்த 7ஆம் திகதி சிறுப்பிட்டி...

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கரண்டிகள், முட்கரண்டிகள், கத்திகள், தயிர் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரிங் ஹாப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் தடை...

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.முன்பதாக அன்றைய முதல்வர் மணிவண்ணன் சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இரண்டாவது சந்தர்ப்பத்துக்கு செல்லும் ஆற்றல் இன்மையால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து புதிய முதல்வராக பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட்...

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் ஏன் அதனை உறுதி செய்யவில்லை? என தமிழத் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்...

பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று (14) முற்பகல் 9:30 மணியளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் சபையில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழ் அரசியல் பரப்பில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது....

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வருவார் என்ற போது உயிரிழந்த செய்தியை தேடி அலைய வேண்டிய தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும், நலமுடனும் இருப்பதாகவும்,உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' எனவும் உலக...

லண்டன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த புடின் ஆதரவாளர் அழைப்பு விடுத்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மீது ஏன் நாம் தாக்குதல் நடத்தக்கூடாது என புடின் ஆதரவாளர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினையிட்டு கேள்வியெழுப்பியுள்ளார். புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். Solovyev "bombs" London and...

உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து கூட்டாக தேர்தலில் களமிறங்க தமிழரசுக் கட்சி தயாராகவே இருந்தது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், இருப்பினும் அதனை ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டார். மேலும் முடிவு எடுப்பதற்கு முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மற்ற கட்சிகள் மீறியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்...

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பிரபாகரன் அனுமதித்ததன் பின்பே இதை கூறுகிறேன் என பழ நெடுமாறன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை...

யாழ்ப்பாணம் அத்தியடி பகுதியில் 52 வயதுடைய சுப்பிரமணியம் கலாநிதி என்ற பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரக்கட்டை ஒன்றினால் தாக்கியே பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரமபகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் கூறியுள்ளனர்.

இரண்டு முறை ஜனாதிபதியும் மூன்று முறை பிரதமருமாகவும் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 77 வயதான அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வினவியபோது, கட்சி எடுக்கும் முடிவு இறுதியானது என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

All posts loaded
No more posts