Ad Widget

மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை – பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது த.சத்தியமூர்த்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டு...

யாழ்.போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு!!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில்...
Ad Widget

குருந்தூர் மலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களைக்கண்டு அங்கிருந்தவர்கள் காட்டுக்குள் ஓட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும்...

ஜனாதிபதியை நோில் சந்திக்க அனுமதிகோரி வடமாகாண கடற்றொழிலாளர்கள் கடிதம்!

இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தொிவித்து வடமாகாண கடற்றொழிலாளர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்படவுள்ளது. இதன்போது நேரில் சந்தித்து பேச வாய்ப்புதரக்கோரியும் குறித்த கடிதத்தில் வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில்...

கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை

யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை மற்றும் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலை வார நிகழ்வுகளின் போது, 3 ஆம் வருட மாணவர்களால், 2 ஆம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் முறை சார்ந்த விசாரணையை...

ஜனாதிபதி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது!

ரணில் விக்ரமசிங்க தன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் இன்று இடம்பெறுகின்ற நிழ்வுகளிற்கு இலங்கையின் ஜனாதிபதி...

இலங்கையில் பெற்றோல் விலை 800 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியம்!!

எதிர்காலத்தில் பெற்றோல் விலையை சுமார் 800 ரூபாவாக அதிகரிப்பதற்கக QR முறையை இல்லாதொழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் வினவிய போது அவர் அதனை நிராகரித்துள்ளார். தற்போது அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை எனவும், எரிபொருளின் விலை 10 - 15 ரூபா...

மேற்குலக நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டம் – சர்ச்சையை கிளப்பும் புடின்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் பெருந்தொகை ஆயுதங்களை வழங்கி தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி புடின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே...