Ad Widget

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலையில் வீதி நாடகம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ். பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடக வளாகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த வீதி விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல்...

புதிய கூட்டணி தொடர்பான கூட்டத்தில் இருந்து விக்னேஷ்வரன் மற்றும் மணிவண்ணன் வெளியேறியுள்ளனர்!

க.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது. ஆனாலும் இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில் தற்போது சில முடிவுகள் இணக்கம் காணப்பட்டாலும் சில...
Ad Widget

எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் மக்கள் தேசியமாவீரர்களின் தியாகங்களுக்கு புறம்பாக செயற்படுகின்ற எவரோடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடாத்தவோ அல்லது இணைந்து செயற்படவோ போவதில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த...

குறைக்கப்பட்டது கோதுமை மாவின் மொத்த விலை!

கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் யாழில் தேசிய பொங்கல் விழா!!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இம்முறை தேசிய பொங்கல் விழா இடம்பெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (15) இரு விழாக்களில் கலந்து கொள்வதற்காக 14 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இம்முறை யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய இவ்வாரம்...

கூட்டமைப்பாக இணைந்து ஒரு பலமான ஆட்சியை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம் – மாவை

நாங்கள் பிரிந்து தேர்தலை எதிர்கொள்வது அணைவரும் இணைந்து ஒரு பலமான ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியாக இருக்கின்றது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இடம்பெற உள்ள...

தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக யாழில் போராட்டம்!

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அங்கிருந்து பேரணியாகச் சென்று மகஜர்களை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத்த தினைக்களத்திலும், அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர்...

தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் திடீர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் புதிதாக இணையவுள்ள கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபமொன்றில் நேற்று வியாழக்கிழமை (12) மாலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டன. க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன...

மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் காணியில் சர்வதேச விளையாட்டு மைதானம்!

யாழ்.மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச விளையாட்டு மைதானத்தை கட்டும் பணிகளை மிக விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற...

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உட்பட பல கொடுப்பனவுகளை நிறுத்த தீர்மானம்???

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதென்றால் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்படப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அது மாத்திரமின்றி சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அனைத்து கொடுப்பனவுகளை இடைநிறுத்தினால் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது...

கொன்று குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய வீரர்கள்:கீவ் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக கீவ் ராணுவம் தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள சோலேடர் நகரில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தபோது, ரஷ்ய வீரர்கள் பலர் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அந்த குழுவின்...