ஜனாதிபதி தலைமையில் யாழில் தேசிய பொங்கல் விழா!!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இம்முறை தேசிய பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (15) இரு விழாக்களில் கலந்து கொள்வதற்காக 14 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இம்முறை யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய இவ்வாரம் ஜனாதிபதி அலுவலக பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள இத்தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts