Ad Widget

யாழ்.வல்லையில் 3 பெண்களிடம் 10 பவுண் நகை வழிப்பறிக் கொள்ளை !

மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறிக் கொள்ளையிட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வல்லைவெளிப் பகுதியூடாக செவ்வாய்க்கிழமை (ஒக் 11) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை வழிமறித்த வழிப்பறி கொள்ளையர்கள், அந்தப் பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர்கள் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி உட்பட...

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு – ராஜித

நாட்டில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்துகள் இல்லை என்பதுதான் சோகமான நிலை. இந்த நாட்களில் நான் அந்த மருந்துகளை வாங்கப் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்தவர்கள், இந்த...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை, அபிவிருத்தி செய்யும் நகர மயமாக்கல் அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம்(10) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தன் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு நகர அபிவிருத்தி...

லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விலைகளை குறைத்துள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயாலும் ,5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5300 ரூபாயாகவும் 5...

பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை இம்மாத இறுதியில் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி, பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தினை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். குறித்த விமான சேவை தொடர்பில் இந்திய விமான...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள் -சுரேஷ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை 2 இலட்ச ரூபாயாக...

எங்களின் உயிர் அவர்களின் இரண்டு இலட்சத்திற்கு பெறுமதியா! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு இழப்பீட்டு அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ள நிலையில் அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனங்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்...

புகலிடக்கோரிக்கைக்காக யாழில் வீடுகள் மீது தாக்குதல்!!

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகச் சென்று அங்கு புகலிடக் கோரிக்கையை பெற்றுக் கொள்வதற்காக தமது வீடுகள் மீது சட்டவிரோத கும்பல்களை வைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளன என்று தெரியவருகின்றது. வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்காக இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவதாக கைதான சந்தேகநபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக மேற்கு நாடுகளுக்குச் செல்லும் பலர் அங்கு தமக்கான...

உக்ரைன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

ரஷ்யா கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு எரிசக்தியைச் சேமிக்க குடியிருப்பாளர்களை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மில்லியன் கணக்கான மக்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ள நிலையில், மின்சாரத்தைச் சேமிக்க உக்ரேனிய குடியிருப்பாளர்கள் அடுப்பு மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். திங்களன்று உக்ரைன்...