Ad Widget

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு – ராஜித

நாட்டில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் புற்றுநோய்க்கான மருந்துகள் இல்லை என்பதுதான் சோகமான நிலை.

இந்த நாட்களில் நான் அந்த மருந்துகளை வாங்கப் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்தவர்கள், இந்த மருந்தை வாங்குவதற்காக ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பேர் என்னை அழைக்கிறார்கள்.

இது ஒரு பெரிய சோகம். இந்த மருந்துப் பொருட்கள் இன்று நாட்டில் மிகப்பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக நான் கருதுகிறேன்.

எனவே, இவற்றின் இருப்பு முறையை அந்த இடங்களில் பேசி உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருந்துகளுக்கு பணம் வந்துள்ளது. ஆனால் அமைச்சகத்தால் அதை வாங்க முடியாது. இதை முற்றிலும் மாற்ற வேண்டும்.

நான் ஜனாதிபதியை சந்தித்த போதும் கூறினேன். இந்த நேரத்தில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இது மக்களின் வாழ்க்கை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts