Ad Widget

பேருந்தில் பயணித்த மூதாட்டி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய பேருந்தில்சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த மூதாட்டி 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பேருந்துக்குள் மயங்கி சரிந்துள்ளார்....

மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச. சாரதி கைது!

மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி மது போதையில் காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் மானிப்பாய்...
Ad Widget

யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத காலத்தில் 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் , தடைக்காலத்தில், பல்கலைக்கழக வளாகத்தினுள்ளோ , மாணவர் விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது....

கொரோனா பரவல் எந்த கட்டுப்பாடும் இன்றி சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரிப்பு?

இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கருத்தில்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய்...

367 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை!

367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல் போன அடையாள அட்டைக்கு பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!!

நாட்டில் காணாமல் போன அடையாள அட்டைகளுக்காக பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தியோகபூர்வமற்ற முறையில் பொலிஸ் அறிக்கைகளை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பொலிஸ் நிலையப் பரிசோதகர் நாயகத்திற்கு விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய, இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் போன அடையாள அட்டைகள் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க...

ரஷ்ய படைகளின் தாக்குதலில் 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள் உயிரிழப்பு!!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். தலைநகர் கீவ்ல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இராணுவத் தளபதி, போர்க்களத்தில் உயிரிழந்த 9000 வீரர்களின் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போரில் 3 ஆயிரம் வீரர்கள் இறந்ததாக கடந்த ஏப்ரல்...