வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா தொற்று பரவல் குறித்து விசேட அறிக்கை!

கொரோனா தொற்று பரவல் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். விசேட அறிக்கையில், கொரோனா தொற்று தற்போது இலங்கை முழுவதும் பரவி வருகின்றது. அந்த வகையில் யாழ் மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு கொரோனா மரணங்களும் யூலை மாதத்தில் நிகழ்ந்துள்ளன....

கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது

நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி...
Ad Widget

தமிழர்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் : ஜனாதிபதி ரணில்

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் என அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதன் பிரகாரம் இன்று காலை 10.30 மணிக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி மூன்றாவது கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கினார். இதன்போது...

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியிடப்படுகின்றது!

021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன. இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருளுக்காக காத்திருந்த மற்றுமொருவர் மரணம்!!!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியில் எரிபொருள் நிலையம் அருகில் காத்திருந்த நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் பெற்றுக்கொள்ள லொறி ஒன்றில் காத்திருந்த 63 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மக்களிடம் விசேட கோரிக்கை!

கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதால், ஒவ்வொருவரும் தமக்கான தடுப்பூசி டோஸ்களை பெற வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ்கள் பெறப்படுவது குறைந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும்...

டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர்

டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்குமான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார். இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை...

ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதித்தது அமெரிக்கா!

உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதன்படி, உலோக நிறுவனமான MMK மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய தொடர்புடையது என அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. அமெரிக்க திறைசேரி இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் புட்டினுடன் நெருங்கிய உறவைக்...