Ad Widget

பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கே எரிபொருள்

முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு அவர் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம்...

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையக்கூடும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உல சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைவடையும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம் எரிபொருள் விலை குறையக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
Ad Widget

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 75 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்கள், வீதிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் பாதுகாப்பு...

ஓகஸ்ட் 01 முதல் QR குறியீடு முறையில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் ( QR குறியீடு) இல்லாவிட்டால் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, வாகன இலக்கத் தகட்டின் கடைசி முறைக்கு எரிபொருள் விநியோகம் உள்பட ஏனைய அனைத்து முறைகளும் ஒகஸ்ட் முதலாம்...

பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலை காணப்படுவதாக வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

ஹைட்டியில் பெரும் கலவரம் – 471 பேர் வரையில் பலி

ஹைட்டியில் குழுக்களுக்கு இடையே இந்த மாதம் நடந்த கடுமையான மோதல்களின் விளைவாக குறைந்தது 471 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மற்றும் சிறுவர்கள் கும்பல்களால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதும் பதிவாகியுள்ளது" என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று...

நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாளாந்த மின்வெட்டு நேரம் மூன்று மணித்தியாலங்களை விடவும் விரைவில் அதிகரிக்கப்படலாம் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை இடையறாது விநியோகம் செய்வதற்கு போதியளவு எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது. மக்கள் நினைப்பதனை விடவும்...

ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் ரஷ்யா – எரிவாயு விநியோகம் மேலும் குறைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிபொருள் விநியோகத்தை கடுமையாக குறைப்பதாக ரஷ்ய எரிசக்தி நிறுவனமான Gazprom அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பிரதான குழாய் வழியாக எரிவாயு விநியோகத்தை கடுமையாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. Nord Stream 1 குழாய் வழியில் மற்றொரு விசையாழியை நிறுத்துவதன் மூலம் நாளாந்தம் எரிவாயு உற்பத்தியை 20 வீதமாக குறைந்துள்ளது....