Ad Widget

அமைதியான ஜனநாயக போராட்டத்தை ஏற்றுக்கொள்கிறேன் : பதில் ஜனாதிபதி ரணில்

அமைதியான ஜனநாயகப் போராட்டத்தினை நான் நூறு வீதம் ஏற்றுக்கொள்கின்றேன். அதற்காக பாராளுமன்ற ஜனநாயகத்தை தகர்த்தெறிவதற்கு இடமளிக்க முடியாதென புதிதாக பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதியதாக இன்றையதினம் பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய பதில் ஜனாதிபதி...

20 ஆம் திகதி வாக்கெடுப்பு!

ஜனாதிபதி பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்றத்தில் அதனை நாளை அறிவிக்க உள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னர் தீர்மானித்தபடி புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 19 ஆம் திகதியும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று...
Ad Widget

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை காலம் நீடிப்பு!!

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் சுகாதார ஊழியர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகள் : அமைச்சு

சுகாதாரப் ஊழியர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகளை இன்று முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்கு வழங்கப்பட்ட பாரிய ஆதரவின் அடிப்படையில் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த விடுத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஒரு தனிநபருக்கு எரிபொருள் வழங்கல்...

பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில்!

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடிதம் தொடர்பில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த சபாநாயகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை சட்டப்பூர்வமாக...

அமெரிக்காவுக்கு காணாமல் போனவர்களின் உறவுகள் அழைப்பு!

அமெரிக்கா, இலங்கை வந்து இங்குள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் அரசியல் விருப்பத்திற்கு அமெரிக்கா வந்து தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் சிவில் சமூகங்கள் உட்பட போரில் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்கா...

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம், கந்தர்மட பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையின் ஊடாக கடக்க முற்பட்ட நபர் ஒருவர் மீது மோதியுள்ளது. இதன்போது, குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றையதினம் மதியம் இடம்பெற்ற இவ்விபத்தில் யாழ்பபாணம் ஓட்டுமடம் பகுதியை...

நாடு முடங்கும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!!

ஸ்திரமான அரசாங்கமொன்றை ஏற்படுத்தாவிட்டால் நாடு முற்றாக முடங்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். அவசியமானபெட்ரோலிய இறக்குமதிக்கான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து பெரும் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசமீட்பு நிதியை பெறுவது என்பது ஸ்திரமான அரசாங்கத்திலேயே தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிய பொருளாதார நெருக்கடி...

கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பில் சற்றுமுன் சபாநாயகரின் அறிவிப்பு

கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன சற்றுமுன் அறிவித்துள்ளார். ஜுலை 14ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமான அவர் பதவி விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றம் நாளைய தினம் கூடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய ஏவுகணைகள் மத்திய நகரமான வின்னிட்சியாவைத் தாக்கியதில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவின் தென்மேற்கில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் மேலும் தொண்ணூறு பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ரஷ்ய ஏவுகணைகள் அலுவலகத் தொகுதியையும் குடியிருப்பு கட்டடங்களையும் சேதப்படுத்தியுள்ளன. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி இதை...