Ad Widget

நாடு முடங்கும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!!

ஸ்திரமான அரசாங்கமொன்றை ஏற்படுத்தாவிட்டால் நாடு முற்றாக முடங்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

அவசியமானபெட்ரோலிய இறக்குமதிக்கான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து பெரும் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசமீட்பு நிதியை பெறுவது என்பது ஸ்திரமான அரசாங்கத்திலேயே தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு பெரும் அமைதியின்மையின்பிடியில் உள்ளது .ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கை தனது பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது உணவு எரிபொருள் உட்பட சாதாரண மக்களிற்கான அடிப்படை பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளன.

பலர் ராஜபக்சாக்கள பொருளாதாரத்தை தவறாக கையாண்டமையே இதற்கு காரணம் என குற்றம்சாட்டுகின்றனர்,மே மாதம் பிரதமரான ரணில்விக்கிரமசிங்கவை அந்த பிரச்சினையின் ஒரு பகுதியாக கருதுகின்றனர்.

ஏப்பிரல் மாதம் மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற நந்தலால் வீரசிங்க ஸ்திரமான நிர்வாகம் இல்லாவிட்டால எவ்வாறு அத்தியாவசிய பொருட்களை வழங்கமுடியும் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என குறிப்பிட்டார்.

இந்த மாதம் இறுதிவரை மூன்று டீசல் கப்பல்களிற்கு எங்களால் கட்டணம் செலுத்த முடியும்,ஒன்று அல்லது இரண்டு பெட்ரோல் கப்பல்களிற்கும் கட்டணம் வழங்க முடியும்,ஆனால் அதற்கு அப்பால் நாட்டிற்கு போதுமான பெட்ரோலை பெறுவதற்கான அந்நியசெலாவணியை வழங்க முடியுமா என்பது குறித்து நிறைய நிச்சயமற்ற நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

அவ்வாறு அந்நியசெலாவணியை வழங்க முடியாவிட்டால் முழு நாடும் முடங்கும் ஆபத்துள்ளது இதன் காரணமாகவே தீர்மானங்களை எடுக்ககூடிய ஜனாதிபதி பிரதமர் அமைச்சரவை தேவை அவ்வாறானதொன்று இல்லாவிட்டால் மக்கள் நெருக்கடியில் சிக்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடன்மறுசீரமைப்பு குறித்து நிதிவழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சிறந்த முன்னேற்றத்தை காணவிரும்புகின்றோம் ஆனால் இது எவ்வளவு வேகமாக சாத்தியமாகும் என்பது ஸ்திரமான நிர்வாகத்தை பொறுத்தது ஸ்திரமான அரசாங்கம் ஏற்பட்டதும் இலங்கையால் மூன்று நான்கு மாதங்களில் நெருக்கடியிலிருந்து மீள முடியும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related Posts