- Wednesday
- July 2nd, 2025

யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் ஜீலை - 1ம் திகதி தொடக்கம் குடும்ப பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் பிரதேச செயலக பிரிவுகளில் மட்டும் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தில் உள்ள எரிபொருள் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஆராயப்பட்டது அரசாங்க அதிபர் தலைமையில்...

கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கியத் தகவலை அடுத்து, இன்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் நடராசா என்னும்...

இன்று (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்ததினத்தை முன்னிட்டு கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் மற்றைய நுழைவாயிலையும் நிதி அமைச்சின் நுழைவாயிலையும் இடைமறித்து கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து குறித்த ஆர்ப்பாட்ட்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சுமார் இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் கா.பொ.த சாதாரன தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாகவே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய எரிபொருள் வழங்கப்பட வேண்டும் அல்லது தமக்கான எரிபொருளை பெறுவதற்கு...

பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதுதொடர்பில் பலாலி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்தார். அமைச்சர் நிமல்...

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில், ரஷ்ய படை வீரர்கள் தொடர்ச்சியாக தாக்குதலை தீவிரப்படுத்தித வருகின்றனர். இந்நிலையில், மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷ்ய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷ்யா அழைத்து வரப்பட்டுள்ளனர். மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல்...

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்தேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்களை...

அடுத்து வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்தி தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரால், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ்...

3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 அன்று பெட்ரோல் மற்றும் ஜூன் 24 அன்று டீசல் இறக்குமதிக்காக...

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் சுழற்சிமுறையில் இரண்டரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேர மின்வெட்டு சுழற்சிமுறையில்...

அரசாங்க அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்று நிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் 2 வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. குறைந்தளவான ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் போது, சுழற்சி முறை மற்றும் வேறு ஏதேனும் பொறிமுறைமையை பின்பற்ற முடியும்...