- Friday
- July 4th, 2025

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் இலகுவாகப் பரவும் என்றும் ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்...

தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 101 புதிய வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார். பன்னிப்பிட்டியவிலுள்ள “வியத்புர” வீடமைப்புத் திட்டத்தில் இருந்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளஅதேவேளை அதன் மதிப்பு தோராயமாக 1795 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மடிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதி...

யாழ் போதனா வைத்தியசாலை இந்திய தூதரகம் ஊடாக கோரியதன்படி இந்திய அரசு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடை உதவியாக வழங்கியுள்ளது. இந்த மருந்துகளை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் இன்று கையளித்தார்.

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன...

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியில் இருந்து கலையரசி எனும் தமிழ் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக்குத் தெரிவாகியுள்ளமை பல்வேறு தரப்புகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி...

வரி அறவீடுகள் மூலம் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது நேரடியாகவும் , மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைத்தள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்தின் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (55) நடைபெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்...

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 10ஆம் திகதி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணி...

நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை எரிவாயு விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிவாயு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், செவ்வாய்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த லாஃப்ஸ் எரிவாயு கப்பலில் இருந்து வழங்கப்பட்ட எரிவாயு...

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி...

உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களாக நீடித்து வருகிறது. ரஷியப் படைகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருப்பினும், கடந்த சில தினங்களாக உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை...