Ad Widget

எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – லாஃப்ஸ் நிறுவனம்

நாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல், எரிவாயு கொள்கலன் விநியோகத்தை லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 20 நாளில் 16 இலட்சம் லீட்டர் பெற்றோல் விநியோகம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அதேவேளை இக் கால பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும் மண்ணெண்ணெய் 4...
Ad Widget

ரணில் மக்கள் வங்கி ஊடாக சாணக்கியனுக்கு கடிதம்!!

கடந்த ஐந்து வருடத்தில் மக்கள் வங்கியில் 54பில்லியன் ரூபா பணம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் தயாகமகே உட்பட பத்து பெரும் பணம்படைத்த வர்த்தகர்கள் அவற்றினை மீள செலுத்தவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றில் தான் பேசியதற்காக மக்கள்...

போரில் காயமடைந்த வீரர்களை முதன்முறையாக சந்தித்த புடின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதன்முறையாக காயமடைந்த ரஷ்ய போர் வீரர்களைப் பார்வையிட்டுள்ளார். உக்ரைன் போர் முயற்சிக்கு ஆதரவைப் பெறுவதற்காக அவர் ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், மொஸ்கோ வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வரும் இரண்டு வீரர்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சந்தித்தார். வெள்ளை நிற கோட் அணிந்த புடின், இரு வீரர்களுடன் அவர்களின்...

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக்

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அபிலாஷா பாரக்கும் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார்....

இன்றும் நாளையும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது – வரிசையில் காத்திருக்க வேண்டாமென அறிவிப்பு!

நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை) மற்றும் நாளையும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 7,500 மெட்ரிக் டன் கொண்ட இரண்டு எரிவாயுக் கப்பல்கள் தற்போது நாட்டை நோக்கி பயணிப்பதாகவும், ஒரு கப்பல் நாளை நாட்டிற்கு வரும் என்றும் மற்றைய கப்பல் ஞாயிற்றுக்கிழமை வரும் என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது.கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் ஒரு வேட்பாளராகவே சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் என கட்சியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்“. இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமிழ் தேசிய மக்கள்...

பெண்ணாக சமூக ஊடகத்தில் உரையாடி பணம் பறித்த ஆண் – வட்டுகோட்டையில் கைது!

கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த கைபேசி அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார்....

அத்தியாவசிய அரச சேவையாளர்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு இன்று முதல் விடுமுறை!

அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மட்டும் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் பணிக்கு அழைக்கப்படவுள்ளனர். இதற்கான சுற்றுநிருபத்தினை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று வெளியிட்டது. எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சினை காரணமாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் செயற்படாதமையால் அரச உத்தியோத்தர்கள் சேவைக்கு...

கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முடியும் வரை வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்கும் வகையில், காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. மே 9 வன்முறையைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிகளாகவும் முறைப்பாட்டாளர்களாகவும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையாகியுள்ளனர். இந்த நிலையில்,...