தெல்லிப்பழையில் மூதாட்டிமீது வாள்வெட்டு!!

தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டியிடம் கொள்ளையடிப்பதற்காக, அவரை வாளால் வெட்டிய நிலையில் மூதாட்டி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இப் பயங்கர சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பழை வித்தகபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியிடம் கொள்ளை இடுவதற்காக மூவர் கொண்ட குழு வீட்டுக்குள் நுழைந்தள்ளது....

கோவிட்-19 தடுப்பூசியின் 4ஆவது அலகு போடும் பணி திங்கள் ஆரம்பம்!!

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 4 ஆவது கட்ட கொவிட் -19 தடுப்பூசி அல்லது இரண்டாவது பூஸ்டர் டோஸ் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டாவது பூஸ்டர் டோஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசியம் வழங்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இருப்பினும், இரண்டாவது பூஸ்டர் டோஸ் 20-60 வயதுக்குட்பட்டவர்களுக்கு...
Ad Widget

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!

இலங்கையின் வடக்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். இது புயலாக மாறுமா என்பது அடுத்த இரு நாள்களுக்குப் பின்னரே கணிக்க...

ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்? – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2022-05-03 திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைப்புச் செய்தியைப் பயன்படுத்தி ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என...

ஹர்த்தால் குறித்து பொலிஸாரின் விசேட அறிவிப்பு

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள், சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன. இந்த ஹர்த்தாலுக்கு 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள், ரயில் , பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம்...

உடன் அமுலாகும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது!

எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) மதியம் ஒரு மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 8,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும்,...