Ad Widget

யாழ். இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைப்பு!

நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் சம்பிரதாயபூர்வமாக இன்று கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில் மாறன், கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர்...

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவினால் இன்று நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டம் மீதான விவாதங்கள்...
Ad Widget

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 48 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 22 ஆயிரத்து 789 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,...

கொரோனாவுக்கு மத்தியில் தீவிரமாகப் பரவும் டெங்குக் காய்ச்சல் – மக்களே அவதானம்!

கொரோனாவுக்கு மத்தியில் நாட்டில் டெங்கு காய்ச்சல் தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் பரவியுள்ளமை அடையாளங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,...

சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் பருத்தித்துறையில் இருவர் கைது!

15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு...