Ad Widget

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதாவது, செப்டெம்பர் மாதத்தின் நேற்று (வெள்ளிக்கிழமை) வரையான காலப்பகுதியில் வடக்கில் 8 ஆயிரத்து 401 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும்...

ஒக்டோபர் முதலாம் திகதி கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்!

ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இந்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாடு திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இருப்பினும் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதி...
Ad Widget

அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தார் சுமந்திரன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது முன்னாள் வட...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் நால்வர் கைது!!

மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், யாழில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை நாட்டிலிருந்து தப்பித்து இந்தியாவில் தங்கியுள்ள தேவா மற்றும் ஜெனி இயக்குவதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு...