Ad Widget

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் சாவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் வேம்படியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண்...

“ஊரடங்கு உத்தரவை நீக்கினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” – நாளைய கூட்டத்தில் இறுதித் தீர்மானம்

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி இல்லை என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “கடந்த காலங்களில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி போடப்படாத நபர்களாகும்.மேலும் அதிகமான தனிநபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால், உயிரிழந்தவர்களில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதையும் சேர்த்தனர். எனினும் எதிர்காலத்தில் வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கிறோம். வெளிநாடுகளுக்கு...
Ad Widget

தரங்கள் 7-13இல் பயிலும் மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி – பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும்

12-18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர், கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக, பாடசாலைகள் அவ்வப்போது சுமார் ஒன்றரை வருடங்கள் மூடப்பட வேண்டியிருந்தது. அதனால் மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார். இன்று (09) சுகாதார...

உடுப்பிட்டியில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் – இராணுவப் பாதுகாப்பு

உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதை அடுத்து பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோயில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த மோதலில்...

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் 1 தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் எனவே...

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு விரைவில் தீர்வு – யாழில் நாமல்!

தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார். யாழிற்கு இன்றைய தினம் (வியாழக்கிழமை) விஜயம் செய்துள்ள அவர், அபிவிருத்தி...

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். அத்தோடு பானங்கள், பழங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், பியர்,...