Ad Widget

அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர வேறெரும் மாகாண எல்லைகளைக் கடக்க முடியாது – இராணுவத் தளபதி

மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு இன்றுமுதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, முன்னர் பரிந்துரைக்கப்பட்ட 150 பேரில் இருந்து திருமணத்துக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை 50...

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி...
Ad Widget

பால்மா மீதான அனைத்து இறக்குமதி வரிகளும் நீக்கம்!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (10) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதன் அமைச்சரவை பேச்சாளர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக்...

நாய் இறந்த சோகத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (வயது-61) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே...

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் – அரசாங்கம்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார். நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை 5000 ஆக உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை...

அன்னதானத்தில் கலந்து கொண்டவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அவசர வேண்டுகோள்!!

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய அன்னதான மடத்தில் உணவு பரிமாறுபவருக்கு கொரோன தொற்று உறுதியானது. செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் (8) ஆரம்பித்தது. இதை முன்னிட்டு ஆலயச்சூழலில் உள்ளவர்கள், ஆலயத்துடன் தொடர்புடையவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கச்சான் வியாபாரிகள் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். சந்நிதியின் மோகன் அன்னதான மடத்தின்...

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்...

கொரோனா வைரஸினால் மேலும் 111 பேர் உயிரிழப்பு – புதிதாக 2 ஆயிரத்து 953 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 111 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 56 ஆண்களும் 55 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை – ஹேமந்த ஹேரத்

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படவில்லை என்றும் தேவைப்படும்போது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன. நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது....