Ad Widget

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் – அரசாங்கம்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார்.

நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை 5000 ஆக உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து, பயணக் கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் புதிய பயணக் கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவு குறித்த முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படலாம்.

Related Posts