. June 17, 2021 – Jaffna Journal

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரம் அன்பளிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு 4.8 மில்லியன் ரூபா பெறுமதியான தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரம் ஒன்று புலம்பெயர் தமிழரான சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்தின் தேவைகருதி, யாழ்.... Read more »

புத்தூர் வீதியில் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார். புத்தூர் – நிலாவரை வீதி வழியாக இன்று(வியாழக்கிழமை) காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார். அவரை வீதியால்... Read more »

மீன் வியாபாரியிடம் கையூட்டு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸாருக்கு இடமாற்றம்!

பயணத்தடை காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ள பொலிஸ் அதிகாரிக்கும், உத்தியோகஸ்தருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. கொரோனா நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரினால்... Read more »

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி மறுப்பு!!

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், முத்திரையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, மதுபான விற்பனையை இணையத்தளம் வழியாக மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மதுவரித்திணைக்களம் முன்வைத்த... Read more »

யாழில். கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா!

கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அச்சுவேலியில் நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற... Read more »

பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும்!!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ள பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என அந்த சங்கம்... Read more »

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தொடருமா? – நாளை தீர்மானம்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை நாளை சந்திக்கவுள்ள கொரோனா பணிக்குழு தற்போதைய நிலைமையை மறுஆய்வு செய்து இந்த விடயம் குறித்து தீர்மானிக்கும்... Read more »

வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ் கொழும்பில் அடையாளம்!

கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய டெல்டா வைரஸான B.1.617.2 மாறுபாடு கொழும்பில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி, வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார். கொழும்பில் பெற்றுக் கொண்ட... Read more »

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு!!

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை இன்று (வியாழக்கிழமை) இந்திய இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து... Read more »