Ad Widget

நிலமைகளை ஆராய்ந்து மாவட்டங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளும் வரலாம்!!!

கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் பற்றிய அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். “மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இன்று நள்ளிரவு முதல் தொடங்கும். இது 30 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய...

உலக யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று ராஜ்குமார் சாதனை!

அகில உலக யோகா சம்மேளனம் நடாத்திய, யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று யாழ் யோகா உலகம் சாதனை படைத்துள்ளது. அகில உலக யோகா சம்மேளனம், அகில உலக யோகா வெற்றியாளர் 2021 ஆம் ஆண்டுக்கான போட்டி கடந்த மாத இறுதிப் பகுதியில் இணைய வழியில் நடத்தியிருந்தது. இப்போட்டியில் யாழ் யோகா உலகம் அமைப்பு சார்பாக...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் கோரோனா தொற்று பாதித்த 36 பேர் அடையாளம்!! 22 பேர் யாழ்.மாநகரில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை (மே 10) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாறாக சிலரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நால்வருக்கு கோரோனா தொற்று...

வடக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கொரோனா தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், முதல் கட்டமாக, வடக்கு மாகாணம் முழுவதிலும் இடைநிலை சிகிச்சைகளை நிலையங்களை மாவட்ட ரீதியில் புதிதாக அமைத்து வருவதாக...

இலங்கையில் 3 மாத குழந்தை உட்பட மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு – ஒரேநாளில் 2 ஆயிரத்து 624 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. காலி, ஹெட்டிபொல, பல்லேவெல, கண்டி, மத்துகம, பாதுக்கை, மீகஹகொடை, அக்குரஸ்ஸ, மொரான்துடுவை, அநுராதபுரம், கொழும்பு-6, கலுஹக்கல, மொரட்டுவை, மல்வானை, கொழும்பு 15, பொரளை, கந்தானை, மாஸ்வெல, வத்தேகம, மாலபே ஆகிய பகுதிகளிலும் யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும்...

‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ சட்டமூலம் நிறைவேற்றம்- இலங்கை அரசாங்கம் அதிருப்தி

‘தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம், கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, குறித்த செயற்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் தனது கவலையை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பின்போது...

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்யத் தடை!

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம், மக்கள் ஒன்றுகூடும் அனைத்து கூட்டங்களையும் இரத்து செய்யவும்...