Ad Widget

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கில் சந்தேக நபர்கள் விடுவிப்பு!!

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபர் திணைகளம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு பரிந்துரைத்துள்ளது. அதனால் 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10...

வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில். “யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்துள்ளது....
Ad Widget

இந்திய தேசம் கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!

இந்தியா கொரோனா நோயிலிருந்து விடுபடயாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது. சர்வதேச இந்து – பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்த வழிபாடு இடம்பெற்றது. இதன்போது, ரத்ன சூத்திர பாராயணமும் ஐம்பெரும் கடவுளுக்கு பூசையும் நடைபெற்றுள்ளது. உலகத்திற்கு தர்மத்தையும் அன்பையும் அகிம்சையையும் போதித்த பாரத தேசம் தற்போது எழுந்துள்ள கொரோனா நெருக்கடியிலிருந்து...

வவுனியாவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

வவுனியாவில் குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலைமுதல் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில், கடந்த வாரமளவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள், கிராமத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தனர். இதையடுத்து, குறித்த இருவருடனும் தொடர்புகளைப் பேணிய 100 பேருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான...

தேசிய ரீதியில் வடக்கு கிழக்கு மாணவர்கள் இருவர் முதலிடத்தில்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவனான தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார் அதேபோன்று , விஞ்ஞானப் பிரிவில், மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மகிழுரைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் முதலிடம் பெற்றுள்ளார் கொரோனா...

யாழ்ப்பாணத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகள் மறு அறிவித்தல்வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளே நேற்று இரவு முதல் முடக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில்...

தமிழகத்தின் புதிய ஆட்சிக்கு சபையில் வாழ்த்துத் தெரிவித்தது கூட்டமைப்பு!

தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால இருப்புத் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தி.மு.க. கூட்டணி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், எதிர்வரும் ஏழாம் திகதி தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், ஸ்டாலினுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில்...

வடக்கில் மேலும் 43 பேருக்குக் கொரோனா- கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் 21 பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் 824 பேரின் மாதிரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 37 பேருக்கும்...

யாழ். நகரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு- முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை இடத்பெற்றது. யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார், யாழ். மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, யாழ். பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் விழிப்புணர்வை மேற்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து...