Ad Widget

தமிழகத்தின் புதிய ஆட்சிக்கு சபையில் வாழ்த்துத் தெரிவித்தது கூட்டமைப்பு!

தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால இருப்புத் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தி.மு.க. கூட்டணி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், எதிர்வரும் ஏழாம் திகதி தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், ஸ்டாலினுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

இலங்கை வாழ் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அவர், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றுள்ள வைகோ, திருமாவளவன் மற்றும் இடதுசாரித் தலைவர்களுக்கும் வாழ்த்துக் கூறியுள்ளளார்.

அத்துடன், வெற்றிவாய்ப்புக்கு அருகிலிருந்த நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எதிர்க்கட்சியாக அமரப்போகும் அ.தி.மு.க.வும் இலங்கை தமிழர் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீதரனன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts